Posts

சோழநாடு என்னும் தமிழ்ப் பெருமிதமும் சமகாலச் சூழலும்

  சோழநாடு என்னும் தமிழ்ப் பெருமிதமும் சமகாலச் சூழலும்      சா. சாம் கிதியோன், உதவிப் பேராசிரியர், பிஷப் ஹீபர் கல்லூரி.            நிலவில் இருந்து பூமியைப் பார்க்கும்போது பூமியின் பரப்பில் மனிதர்களால் கட்டப்பட்ட சீனப் பெருஞ்சுவர் மட்டுமே கண்ணில் தென்படுமாம் என்பதுபோல இமயத்திலிருந்து நோக்கினால் குமரிநில எல்லைக்குள் புலப்படும் ஒரே நிலம் சோழமண்டலம் என்றால் மிகையில்லை. மூவேந்தர் ஆட்சி செய்த தமிழிந்தியாவில் துலக்கமாகவும் விரிவாகவும் அந்தளவிற்கு இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாற்று ஏடுகளில் இடம் பிடித்த ஒரே நிலப்பரப்பு அல்லது ஒரே பேரரசு என்றால் அது சோழ நாடும் சோழப் பேரரசுமே ஆகும். இப்பெருமிதம் ஆளும் வர்க்க மனநிலையிலிருந்தும் வரலாற்று எழுதியலின் பெரும்போக்கு அடிப்படையிலிருந்தும் முகிழ்ப்பதாகும். வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் வழங்கும் மண்ணை ஆண்ட மூவேந்தர்களுக்கும் நானில அமைப்புமுறை பொதுவாக இருப்பினும் ஒப்பீட்டு அளவில் சோழ நிலஅமைப்பின் தனித்தன்மை முக்கியமானது.     குறிப்பாகப் பொன்னியாறு (காவிரி) பாயும் பெரும் வண்டல் சமவெளியும் வளமான நீண்ட கடல்வெளிப் பரப்பும். மருதநில நாகரிகத்தின் வர

சூல் நாவலின் புனைவுவெளியும் சோ. தருமன் ஒத்தியெடுக்கும் சனாதானக் கட்டமைப்பும்

சூல் நாவலின் புனைவுவெளியும் சோ. தருமன் ஒத்தியெடுக்கும் சனாதானக் கட்டமைப்பும்                                             சா. சாம் கிதியோன், உதவிப் பேராசிரியர், பிஷப் ஹீபர் கல்லூரி        இவ்வையக இயக்கத்தில் உருவான சமுகமைப்புகளில் நிலவுடமை சமுகத்தின் வளர்சிதை மாற்றப் பதிவுகள் வாசிப்புக்குரியவை. அந்தவகையில் இந்திய நிலவுடமை சார்ந்த, ஒருபகுதி வாழ்வியல் மாற்றங்கள் குறித்து சோ. தர்மனின் பார்வையில் உருவானதுதான் சூல் நாவல்.   நிலவுடமை உற்பத்தி வாழ்வின் தன்னிறைவு பெற்ற இந்திய ஊர்களில் ஒன்று எட்டயபுர சமஸ்தான ஜமீனுக்குட்பட்ட உருளைக்குடி என்ற கரிசல்வெளி. இக்கரிசல் நிலப்பரப்பின் சமூகப் பொருளாதார அரசியல் பண்பாட்டின் கடைசி இருநூறாண்டு காலப் பகுதி மாற்றங்கள் புனைவாக சூல் நாவலில் விவரிக்கப்பட்டுள்ளன.      பொதுவெளியில் எட்டயபுர சமஸ்தான ஜமீனின் காலனியகால அரசியல் நடவடிக்கைகளை   பாஞ்சாலங்குறிச்சி பாளையக்கார ஆளுமைகளான   கட்டபொம்மன் – ஊமைத்துரை சகோதரர் களோடு ஒப்பிட்டு ‘காட்டிக் கொடுத்த எட்டப்பன்’ என்னும் வசையாக வழங்குகின்றனர். . இவ்வசைக்கு மாறாக இவ்வூரைச் சார்ந்த எலியன் – பிச்சையாசாரி ஆகியோர் மனிதா